ஏழைகளுக்கு உணவு, முக கவசம் வழங்கி தொழிலாளர் தினத்தை கொண்டாடிய இளைஞர்கள்


ஏழைகளுக்கு உணவு, முக கவசம் வழங்கி தொழிலாளர் தினத்தை கொண்டாடிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 1 May 2020 11:40 PM GMT (Updated: 2020-05-02T05:10:55+05:30)

ஏழைகளுக்கு உணவு, முக கவசம் வழங்கி தொழிலாளர் தினத்தை கொண்டாடிய இளைஞர்கள்.

செந்துறை,

நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் இளைஞர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 1-ந்தேதி தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சந்தைப்பேட்டை இளைஞர்கள் சார்பில் நேற்று தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர்கள் தங்களது சொந்த செலவில் உணவு தயார் செய்து, அவற்றை ஏழைகளுக்கு வழங்கினர். மேலும் அவர்களுக்கு இளைஞர்கள் முக கவசம் வழங்கி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதற்கிடையே செந்துறை வழியாக நத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் ஆகியோர் ஏழைகளுக்கு இளைஞர்கள் உணவு வழங்கி கொண்டிருந்ததை பார்த்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த அவர்கள், உணவு மற்றும் முக கவசம் வழங்கிய இளைஞர்களை பாராட்டினர். 

Next Story