மதுபாட்டில்களை விற்பனை செய்த சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிட மாற்றம் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


மதுபாட்டில்களை விற்பனை செய்த சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிட மாற்றம் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 2 May 2020 5:26 AM IST (Updated: 2 May 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்களை அழித்தபோது விற்பனை செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிட மாற்றம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம், 

மதுபாட்டில்களை அழித்தபோது விற்பனை செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிட மாற்றம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

மதுபாட்டில்கள் விற்பனை

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானங்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டு குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக போலீசாரால் கைப்பற்றி போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மதுபானங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகூர் போலீஸ் நிலையத்தில் இருந்த மதுபானங்கள் அழிக்கப் பட்டது. அப்போது அந்த மதுபானங்களை எடுத்து ஏட்டு அன்பழகன் விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தது. இதேபோல் நாகை மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றிய மதுபானங்கள் நாகை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து அழிக்கப்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மதுபானங்களை சிலருக்கு எடுத்து கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிட மாற்றம்

இந்த இரண்டு புகார்களையும் விசாரணை செய்ய தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை திருக்குவளை போலீஸ் நிலையத்திற்கும், ஏட்டு அன்பழகனை ஆயுதப்படை பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

Next Story