குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின கொண்டாட்டம்


குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 2 May 2020 6:03 AM IST (Updated: 2 May 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினம் தொழிற்சங்க கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினம் தொழிற்சங்க கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

மே தினம்

உலகம் முழுவதும் மே 1-ந்தேதி தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் துறை சார்ந்த தொழிலாளர்கள் தங்களது அலுவலகத்தில் தொழிற்சங்க கொடிகளை ஏற்றி, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொள்வார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், நேற்று மேதினம் கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் தங்களது வீட்டின் முன் தொழிற்சங்க கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

150 வீடுகளில்

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று காலை நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள 150 வீடுகளில் தொழிற்சங்க கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் அந்தோணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், மீன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜன், தீபா, மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது கொடியேற்றினார். பார்வதிபுரத்தில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தங்க மோகன் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள்

வெட்டூர்ணிமடம் நாகம்மாள் ஆலை வளாகத்தில் ஆலையின் சங்க செயலாளர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கி, கொடியேற்றினார். இதில் ஏராளமான தொழிலாளிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர். ராணி தோட்டம் அரசு போக்குவரத்துக் கழகம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் போக்குவரத்து தொழிலாளர் சங்க துணைத்தலைவர் லியோ தலைமை தாங்கி கொடியேற்றினார். இதில் போக்குவரத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டார் ரெயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யு. சார்பில் யூனியன் தலைவர் பூபதி தலைமை தாங்கி கொடியேற்றினார். நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மோட்டார் ஒர்க்ஸ் யூனியன் அலுவலகத்தில் அதன் துணைத் தலைவர் பரமசிவம் தலைமையில் கொடியேற்றப்பட்டது. இதில் யூனியன் நிர்வாகிகள் அருணாச்சலம், பெஞ்சமின், ஆறுமுகம் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story