கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடியதாக 33 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடியதாக 33 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2020 10:45 PM GMT (Updated: 2 May 2020 8:28 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடியதாக 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திகிரி, 

மத்திகிரி

மத்திகிரி போலீசார் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் ஓம்சக்தி நகர் கணேஷ் (வயது 32), மத்தம் அக்ரஹாரம் பிரகாஷ் (35), ஓசூர் பாரதி நகர் கிரண் (24), மத்தம் அக்ரஹாரம் கெம்பையா (40), அம்ரீஷ் (27), சந்திரன் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,740 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல அன்னை நகரில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் ஜெயசக்தி நகர் தொட்டையன் (40), தளி சாலை முனிராஜ் (38), சுண்ணாம்பு ஜீபி வினோத் (32), கார்த்திக் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,230 மற்றும் 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தளி

தளி போலீசார் ஜவளகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஜவளகிரியைச் சேர்ந்த கணேஷ் (23), நாகராஜ் (31), கோபி (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல தளி போலீசார் கொடசரெட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பஞ்சேஸ்வரம் சந்தோஷ்குமார் (29), முனிரெட்டி (31), பாபு (29), ரமேஷ் (40), வெங்கடேஷ் (35), முனியப்பா (65) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8,300 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல போலீசார் மற்றொரு பகுதியில் நடத்திய சோதனையில், பஞ்சேஸ்வரம் மஞ்சுநாத் (27), நாகராஜ் (30), நாராயணப்பா (45), மாதேஷ் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7,240 பறிமுதல் செய்யப்பட்டது.

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி போலீசார் அகரம் முருகன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியைச் சேர்ந்த தனபால் (வயது 24), ரகு (30), சந்துரு (24), சரவணன் (30), முருகேசன் (31), வீரன் (36), சிவக்குமார் (29) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,200 பறிமுதல் செய்யப்பட்டது.

அளேசீபம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய ரவிச்சந்திரன் (24), பையா (25), திம்மராஜ் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,700 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story