தியாகதுருகம் அருகே நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தியாகதுருகம் அருகே நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கும், ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கும் சிங்கப்பூர் நண்பர்கள் குழு என்ற பெயரில் நிவாரணம் வழங்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமொழி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ் இனியன், கிராம ஊராட்சி செயலாளர் ரஞ்சிதம், சிங்கப்பூர் நண்பர்கள் குருமூர்த்தி, நடராஜன், முரளி, மூர்த்தி, கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story