வர்த்தக சங்க துணைத்தலைவரை தாக்கிய ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் திருச்சி சரகத்திற்கு மாற்றம்
வர்த்தக சங்க துணைத்தலைவரை தாக்கிய ஒரத்தநாடு சப்-.இன்ஸ்பெக்டரை திருச்சி சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்
ஒரத்தநாடு,
வர்த்தக சங்க துணைத்தலைவரை தாக்கிய ஒரத்தநாடு சப்-.இன்ஸ்பெக்டரை திருச்சி சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்
வர்த்தக சங்க நிர்வாகி மீது தாக்குதல்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர், ஒரத்தநாடு நகர வர்த்தக சங்க துணைத்தலைவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை கடைத்தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன், குமாரை தாக்கியதோடு அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்தும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் கையில் காயம் அடைந்த குமார், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் தொடர் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றம்
இந்த சம்பவம் குறித்து வர்த்தக சங்க பிரமுகர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இந்த நிலையில் ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணனை, திருச்சி சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story