பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உப்பட்டி அருகே கையுன்னி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின் இணைப்பு திடீரென துண்டித்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் தங்கி இருந்த மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், பணியை புறக்கணித்து நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊட்டி ஆவின் வளாகத்தில் சமூக இடைவெளி விட்டு நின்று போராட்டம் நடத்தினர். அதேபோல் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்திலும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் அத்தியாவசிய துறையான மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணிகள் பாதிப்பு
அதனை தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ் தன்னை மோசமாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி பேசி மிரட்டினார். இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பணி செய்ய விடாமல் தடுத்த மாவட்ட ஊராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த புகார் மனு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டியில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் காரணமாக அலுவலகங்களில் உள்ள அனைத்து பிரிவுகளும் வெறிச்சோடி இருந்தது. இதனால் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவதை கணினியில் சரிபார்ப்பது, ஊரடங்கு காலத்தில் கடந்த மாதம் செலுத்த வேண்டிய தொகையை நடப்பு மாதம் வசூலிப்பது, கணக்கெடுப்பு பணி போன்ற அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story