திருவாரூர் மாவட்டத்தில் 9-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 9-வது நாளாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 9-வது நாளாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. சிவப்பு மண்டலத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் விரைவில் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 29 பேர் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 18 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒருவர் குணம் அடைந்தார்.
இதனால் தற்போது 10 பேர் மட்டுமே திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மேலும் குறையும் என தெரிகிறது.
தொற்று இல்லை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி முதல் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாமல் இருந்து வருகிறது. நேற்று 9-வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், தொடர்ந்து நோய் தொற்று இல்லாததாலும் திருவாரூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story