தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி வந்தது


தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 3 May 2020 1:15 AM GMT (Updated: 3 May 2020 12:16 AM GMT)

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி வந்தது.

நாகர்கோவில், 

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி வந்தது.

சரக்கு ரெயில் மூலம் அரிசி

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழில்களும் முடங்கி உள்ளன. தொடர் ஊரடங்கால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதே சமயத்தில், அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருளும் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, குமரி மாவட்டத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி சமீபத்தில் 2 முறை வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்துள்ளது.

நாகர்கோவிலுக்கு வந்தது

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியில் இருந்து 3 ஆயிரம் டன் புழுங்கல் அரிசி நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவை சரக்கு ரெயில் மூலம் நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 49 வேகன்கள் மூலம் வந்த அரிசி மூடைகளில் பாதி மூடைகள் நேற்று லாரிகள் மூலம் பள்ளிவிளை மத்திய அரசு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மீதி மூடைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் பள்ளிவிளை குடோனில் மொத்தம் 15 ஆயிரம் டன் புழுங்கல் அரிசி இருப்பில் உள்ளதாக உணவு பொருள் கிடங்கு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Next Story