போலீசாருக்கு நோய்த்தொற்று தடுப்பு சுவாச பொடி
சிவகங்கை நகர் போலீஸ்நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் சுவாச பொடியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை நகர் போலீஸ்நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு கொரோனா நோய்தொற்று பரவாமல் தடுக்கும் சுவாச பொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் நோய்த்தொற்றை தடுக்கும் நகர் போலீசாருக்கு சுவாச பொடி மற்றும் ஒராக் டீ ஆகியவைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக ராசி இயற்கை உணவுகள் பயிற்சி மையத்தின் டாக்டர்கள் சரவணன், ராஜரீகா ஆகியோர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் முதலில் தொண்டைக்குள் புகுந்து சுவாச பாதைகள் வழியாக நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தமிழ்நாட்டின் மிக பழமையான மருத்துவத்தில் கூறப்பட்ட சுவாச பொடி மூலம் குணப்படுத்தலாம். இந்த மருத்துவ முறை ராமாயண காலத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மலேசியா, சீனா போன்ற நாடுகளில் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒராக் டீ மற்றும் நெல்லிக்காய் ஆகியவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டரின் அனுமதியுடன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சுவாச பொடி கொடுத்ததில் அவர்கள் குணமடைந்து உள்ளனர். இந்த சுவாச பொடி மற்றும் ஒராக் டீ ஆகியவை மக்களுக்கு உதவுவதற்காக இலவசமாக வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் நகர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசிவம், முருகேசன், வெள்ளைச்சாமி உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story