மருத்துவத்துறை அலுவலர்களுக்கு ‘கபசுர’ குடிநீர் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்


மருத்துவத்துறை அலுவலர்களுக்கு ‘கபசுர’ குடிநீர் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்
x
தினத்தந்தி 3 May 2020 9:27 AM IST (Updated: 3 May 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவத்துறை அலுவலர்களுக்கு ‘கபசுர’ குடிநீர் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘கபசுர’ குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, மருத்துவத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு ‘கபசுர’ குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவற்றை வழங்கி, ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் குறித்த கண்காட்சியையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் வாலாஜா மாவட்ட தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் சார்பில் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் இயற்கை உணவு கண்காட்சி மற்றும் எளிமையான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா மற்றும் வாலாஜா, அரக்கோணம் அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story