சென்னை, பிற மாவட்டங்களில் இருந்து வந்த 181 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
சென்னை, பிற மாவட்டங்களில் இருந்து வந்த 181 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை.
செய்யாறு,
சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், அங்கு தங்கி வேலை பார்த்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர், கடந்தசில நாட்களாக அங்கிருந்து இரவோடு இரவாக புறப்பட்டு செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்து தங்கி உள்ளவர்களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்திரவின்பேரில் கிராம அளவில் உருவாக்கப்பட்டுள்ள குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அக்குழுவினர் கொடுக்கும் தகவலின்பேரில் மருத்துவக் குழுவினர் போலீசாருடன் சென்று 181 பேரை அழைத்து வந்து செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ வார்டில் தங்க வைத்து தனிமைப்படுத்தி உள்ளனர்.
சென்னை மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து வந்த 181 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னர் கொரோனா தொற்று இல்லை என உறுதியான பிறகே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story