வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, ஒன்றிய நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
குன்னம்,
வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, ஒன்றிய நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
லாரிகள் மூலம் திரும்பி வந்துள்ளனர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட குன்னம், சித்தளி, பேரளி, ஒதியம், புது வேட்டக்குடி, திருமாந்துறை, துங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 3 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். வேப்பூர் ஒன்றிய பகுதிகளில் வசித்து ஏழ்மையின் காரணமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் தங்கள் வாழ் வாதாரத்திற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி யாகவும் மற்றும் கொத்த வாசல் சாவடி பகுதி களில் கூலித் தொழிலாளியா கவும், ஆட்டோ ஓட்டியும், ஓட்டலிலும் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரு கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்புவது வழக்கம். தற்போது கொரோனவால் கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக இயங்க வில்லை. இதனால் அங்கு வசித்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த சில தினங்களாகவே காய்கறி ஏற்றி வரும் லாரிகள் மூலம் திரும்பி வருகின்றனர்.
பொதுமக்கள் பீதி
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரு கிறது. இதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து திரும்பி யவர்களில் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு சொந்த ஊருக்கு திரும்பியவர் களில் பலர் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளதால் மேலும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக? பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேப்பூர் ஒன்றிய பகுதி களில் கொரோனா வைரசின் பாதிப்பு குறித்து பொதுமக் களிடம் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வில்லையாம். இதனால் பொதுமக்கள் வெளியூர் களில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வில்லையாம். எனவே வேப்பூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மூலமாக வீடு வீடாக சென்று கொரோனா வைரசின் பாதிப்பு குறித்து விழிப் புணர்வு செய்தும், கொரோனா வைரஸ் பரவா மல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண் டும். ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை ஒரு கிரா மத்திற்கு வெளியூரி லிருந்து புதிதாக வந்து உள்ளவர்கள் பற்றி கணக் கெடுத்து அவர் களை போலீ சார் உதவியுடன் கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர் களும் கோரிக்கை விடுத்துள் ளனர்.
Related Tags :
Next Story