புதிதாக தேர்வு செய்யப்பட்ட 86 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை


புதிதாக தேர்வு செய்யப்பட்ட 86 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 4 May 2020 4:00 AM IST (Updated: 3 May 2020 11:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 86 போலீசாருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை போலீசார், சிறைக்காவலர்கள், தீயணைப்பு துறை காவலர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்கூறு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை முடிந்து உள்ளது.

இவர்களுக்கு கடந்த மாதம் 2-ந் தேதி பயிற்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக பயிற்சி தொடங்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற 86 பெண் போலீசார் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து அரசு டாக்டர்கள் மூலம் 86 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் 86 பேரும் பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில், போலீசாருக்கான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அதன்பிறகு அவர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story