கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை நாளை மறுநாள் முதல் இயக்கலாம்: கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை நாளை மறுநாள் முதல் இயக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகளை நாளை மறுநாள் முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக முதல்-அமைச்சரால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் தொழில் நிறுவனங்களுக்கு தளர்த்த உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது தொழில்நிறுவனங்களை இயக்கிட விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆணையில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்கிட விதிமுறைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விதிமுறைகளின் படி பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இயக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு mhskgi@gmail.comமின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கான வாகன அனுமதி சீட்டு பெற https:--tne-pass.tne-ga.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story