திருக்கோவிலூரில் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


திருக்கோவிலூரில் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2020 3:31 AM IST (Updated: 4 May 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.

திருக்கோவிலூர்,

ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் கட்டகோபுரம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கே.சுப்பு, ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி ஆகியோர் கலந்து கொண்டு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

இதில் அவைத்தலைவர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் சி.ஆர்.சம்பத், முன்னாள் அவைத்தலைவர் ராணி என்கிற ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லலிதாவெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி நிர்வாகி எம்.கே.எஸ்.முருகன், பேரவை நிர்வாகி சக்திவேல், கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story