திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 13,696 பேர் கைது 12,436 வாகனங்கள் பறிமுதல்
திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 13,696 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 12,436 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 13,696 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 12,436 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி அட்டை
கொரோனா வைரசை கட்டுப்படுத்திட ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சையில் குணமடைந்து 19 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்திற்கு 6 நாட்கள் வெளியில் வருவதற்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
13,696 பேர் கைது
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மீறுபவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 13,288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,696 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12,436 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story