செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொடைக்கானலில் 500 பேருக்கு நல உதவிகள்
செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொடைக்கானலில் 500 பேருக்கு நல உதவிகள்.
கொடைக்கானல்,
அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கொடைக்கானலை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள், விறகு சுமக்கும் பெண்கள், ஒலி-ஒளி அமைப்பு தொழிலாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் என 500 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று கொடைக்கானல் பஸ் நிலைய பகுதியில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான டாக்டர் குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தாவூது வரவேற்றார்.
இதில் ஆர்.டி.ஓ. சிவக்குமார், நகராட்சி ஆணையர் நாராயணன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் முகமது அனிபா, ராஜாராணி ராஜா, நாட்டுராயன், அப்பாஸ், வாகன ஓட்டுனர் சங்க தலைவர்கள் ரமேஷ், அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story