மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60 ஆயிரம் கடன் கண்காணிப்பு அதிகாரி சண்முகம் தகவல்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்கப்படும் என கண்காணிப்பு அதிகாரி சண்முகம் கூறினார்.
நாகப்பட்டினம்,
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்கப்படும் என கண்காணிப்பு அதிகாரி சண்முகம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-
நாகை மாவட்டத்தில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் குணம் அடைந்துள்ளனர். 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்கு வரக்கூடியவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.
கடன் உதவி
ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை சிறப்பு கடன் வழங்கப்படும். இந்த கடன் வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை மூலமாக அடுத்த 10 நாட்களுக்குள் வழங்கப்படும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையின்படி வாய்க்கால்கள் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரப்படும். எந்தெந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பது குறித்த விவரங்கள் விவசாயிகளிடம் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை உதவி கலெக்டர் பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story