நெல்லை, தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விற்பனை


நெல்லை, தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விற்பனை
x
தினத்தந்தி 4 May 2020 7:55 AM IST (Updated: 4 May 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

மலிவு விலையில் மளிகை பொருட்கள்

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கூலி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு ரூ.1000 நிவாரண உதவியை தமிழக அரசு வழங்கியது. ஏப்ரல், மே மாதத்துக்கான அரிசி, பருப்பு, பாமாயில் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், 500 ரூபாய்க்கு மலிவு விலையில் மளிகை பொருட்களின் தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த தொகுப்பில், துவரம்பருப்பு 500 கிராம், உளுந்தம்பருப்பு 500 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், மிளகு 100 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், உப்பு 1 கிலோ, வெள்ளைப்பூண்டு 250 கிராம், புளி 250 கிராம், பொரிகடலை 250 கிராம், வத்தல் 150 கிராம், மல்லி 200 கிராம், மஞ்சள்பொடி 100 கிராம், டீத்தூள் 100, பட்டை 10 கிராம், சோம்பு 50 கிராம், மிளகாய் பொடி 100 கிராம் உள்பட 19 பொருட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இன்று முதல் விற்பனை

இதுகுறித்து கூட்டுறவு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு அறிவித்த படி 19 வகையான மளிகை தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, நாங்குநேரி, சங்கரன்கோவில், அம்பை உள்ளிட்ட 6 இடங்களில் மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லையில் வண்ணார்பேட்டையில் உள்ள கூட்டுறவு பேரங்காடிக்கு சொந்தமான குடோனில் பாக்கெட் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1,184 ரேஷன் கடைகள் உள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமாக சுமார் 200 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் மலிவு விலை தொகுப்பு மளிகை பொருட்களின் வினியோகம் தொடங்குகிறது” என்றார்.

Next Story