மணப்பாறை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
மணப்பாறை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
வையம்பட்டி,
மணப்பாறை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பெண்ணுக்கு பிரசவம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளபிச்சம்பட்டியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 19). நிறைமாத கர்ப்பிணியான விஜயலட்சுமி தனது தாய் வீடான கார்வாடியில் இருந்தார். நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், மணப்பாறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் கார்வாடி வந்து கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள சுக்காம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தது.
அழகான பெண் குழந்தை
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும்போதே விஜயலட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் காளிமுத்து ஆம்புலன்சை மெதுவாக ஓட்ட, அவசர கால மருத்துவர் பாஸ்கர், விஜயலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது விஜயலட்சுமி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர், தாயும், சேயும் சுக்காம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு, தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு விஜயலட்சுமியின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story