சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து கரூர் வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை


சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து கரூர் வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 4 May 2020 10:08 AM IST (Updated: 4 May 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து கரூர் வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வக்குமார் கூறினார்.

கரூர், 

சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து கரூர் வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வக்குமார் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீசார் கண்காணிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். கரூர் மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் சுங்கச்சாவடி அமைத்து சென்னை மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இருசக்கரவாகனம் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் குறித்து போலீசார் சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுக்கின்ற னர். இதனையடுத்து அவர்களை தொடர்பு கொள்ளும் சுகாதாரத்துறையினர் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களை தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

500 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் வாங்கல் அருகே ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அப்பகுதியில் இருந்த கிராமத்தினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 133 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் தொற்று இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 53 போலீசார் பணிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு பணி வழங்குவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் பணிக்கு அனுப்பப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story