ஊரடங்கால் தொழில் பாதிப்பு: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஒயிலாட்டக் கலைஞர்கள்
ஊரடங்கால் தொழில் பாதித்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஒயிலாட்டக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான்,
தமிழ் பாரம்பரிய கலைகளில் ஒன்று ஒயிலாட்டம். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடு, வெளிமாநிலம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் திருவிழா, அரசு விழா மற்றும் குடும்ப சுப நிகழ்ச்சிகளிலும் ஒயிலாட்டம் ஆடப்படும். தற்போது ஊரடங்கு உத்தரவால் ஒயிலாட்டக் கலைஞர்கள் தொழில் பாதிக்கப்பட்டு 40 நாட்களாக வீட்டிலே முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் சுமார் 50 ஒயிலாட்டக் கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக ஒயிலாட்டம் ஆடி வருகின்றனர். இந்த குழுவினரை சேர்ந்த கலைஞர்கள் சோலைமலை மற்றும் ராஜேந்திரன் கூறும்போது, “ஊரடங்கு உத்தரவால் தற்போது எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் உண்ண உணவின்றி மிகவும் தவிப்புக்குள்ளாகி வருகிறோம். இந்த தமிழ் கலையான ஒயிலாட்டத்தை நாடு முழுவதும் பறைசாற்றி வரும் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story