தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.7¼ லட்சம் செலவில் நவீன கிருமி நாசினி தெளிப்பான்


தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.7¼ லட்சம் செலவில் நவீன கிருமி நாசினி தெளிப்பான்
x
தினத்தந்தி 5 May 2020 3:45 AM IST (Updated: 5 May 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.7¼ லட்சம் மதிப்பில் புதிய நவீன கிருமி நாசினி தெளிப்பான் வாங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி முழுவதும் தொடர்ச்சியாக மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அதி நவீன கிருமி நாசினி தெளிப்பான் மாநகராட்சிக்கு வாங்கப்பட்டு உள்ளது.

இந்த தெளிப்பான் ஒரு மணி நேரத்துக்கு 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினி திரவத்தை தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து சிறிய மற்றும் குறுகிய தெருக்களிலும் இந்த கிருமிநாசினி தெளிப்பானை கொண்டு செல்ல முடியும். இந்த கிருமி நாசினி தெளிப்பான் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சியின் முக்கிய தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story