கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2020 4:00 AM IST (Updated: 5 May 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்,

ஓசூர் டவுன், சிப்காட்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் கோகுல் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தாசன் நகர் திவாகர் (வயது 24), நவதி சதீஷ் (32), கிருஷ்ணப்பா நகர் பிரவீன் குமார் (23), மார்டின் லூதர் (28), செந்தில்குமார் (27), சசிக்குமார் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் டவுன் போலீசார் காரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணப்பா நகரை சேர்ந்த ராஜேஷ் (35), சுரேஷ் (22), ஆர்.கே. நகர் சந்தியகுமார் (22), ஓசூர் தின்னூர் தினேஷ்குமார் (23), சாமுவேல்ராஜா (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் சிப்காட் போலீசார் சின்ன எலசகிரி பாலாஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாலாஜி நகரை சேர்ந்த லட்சுமணன் (38), மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் ராதாகிருஷ்ணன் (49), அண்ணா நகர் நாகராஜ் (56), அச்செட்டிப்பள்ளி சிவக்குமார் (37) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,250 பறிமுதல் செய்யப்பட்டது.

பேரிகை, மத்திகிரி

பேரிகை போலீசார் கடத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சூளகிரி தாலுகா கடத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (29), யானைக்கல்தொட்டி சரவணன் (36), கடத்தூர் நரசிம்மன் (24), சந்தீப்குமார் (19), தேவராஜ் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திகிரி போலீசார் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த ரகு (25), வேணு (29), வெங்கடபதி (48), திம்மராயப்பா (55), மாதேஷ் (32), கிரண் (20), வேணுகோபால் (22) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,740 பறிமுதல் செய்யப்பட்டது.

தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி

தேன்கனிக்கோட்டை போலீசார் அந்தேவனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மின்ஹக் (28), மகேஷ் (32), முரளி (28), மாதேஷ் (48), பைரோஸ் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தனப்பள்ளி போலீசார் துப்புகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த மாதேஷ் (32), ஜீவா (22), மல்லேஷ் (24)இ, மாலின் (34), சக்திவேல் (21), ஷான்பாஷா (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப் பட்டது.

Next Story