கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 3,550 பேர் கண்காணிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 3,550 பேர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 3:30 AM IST (Updated: 5 May 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 3,550 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரை 2,086 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த 3,550 பேர் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 2,734 பேருக்கு 28 நாட்கள் முடிந்துள்ளன. மீதமுள்ள 816 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதே போல் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 1,601 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதில் 657 பேருக்கு 28 நாட்கள் முடிந்துள்ளன. மீதமுள்ள 944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 28 நாட்கள் முடிந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story