தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது


தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 5 May 2020 4:30 AM IST (Updated: 5 May 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டி உள்ளது.

மும்பை, 

மும்பையில் கொரோனா வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. 

இதில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகப்பட்சமாக மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் 1 மாத ஆண் குழந்தை உள்பட 7 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மற்றவர்கள் பிலா பங்களா, கோபால் மிஸ்திரி சால், சாகித் பகத்சிங்நகர், சோனா நகர், சந்த் ரோகிதாஸ் மார்க், சித்தார்த் காலனி, உதய் சொசைட்டி, தாராவி போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.

632 பேருக்கு பாதிப்பு

இதன் மூலம் தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல இங்கு இதுவரை 20 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

இதுதவிர நேற்று தாதரில் 4 பேருக்கும், மாகிமில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை முறையே 54, 71 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story