திண்டுக்கல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலர், தூய்மை காவலர்களுக்கு சத்து மாத்திரை


திண்டுக்கல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலர், தூய்மை காவலர்களுக்கு சத்து மாத்திரை
x
தினத்தந்தி 5 May 2020 4:58 AM IST (Updated: 5 May 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலர், தூய்மை காவலர்களுக்கு சத்து மாத்திரை.

முருகபவனம்,

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் செட்டிநாயக்கன்பட்டி, முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 14 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மல்டி விட்டமின் மற்றும் ஜின்க் உள்ளிட்ட சத்து மாத்திரைகள் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன் கலந்துகொண்டு ஊராட்சி செயலர்களிடம் சத்து மாத்திரைகளை வழங்கினார். ஊராட்சி செயலர்கள் அந்த மாத்திரைகளை தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அலுவலக ஊழியர்களுக்கு வழங்க உள்ளனர். 10 நாட்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள் ஊராட்சி செயலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 

Next Story