ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,350 டன் டி.ஏ.பி.உரம் தஞ்சை வந்தது

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,350 டன் டி.ஏ.பி.உரம் தஞ்சை வந்தது
x
தினத்தந்தி 5 May 2020 5:07 AM IST (Updated: 5 May 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,350 டன் டி.ஏ.பி.உரம் தஞ்சை வந்தது. இந்த உரம் தஞ்சையில் இருந்து 3 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,350 டன் டி.ஏ.பி.உரம் தஞ்சை வந்தது. இந்த உரம் தஞ்சையில் இருந்து 3 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

குறுவை சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் இருப்பதால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு இடங்களில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.

1,350 டன் உரம்

இந்த குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது குறுவை சாகுபடிக்காக நேற்று ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,350 டன் டி.ஏ.பி. உரம் வந்தது. இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகள் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், சேமிப்பு கிடங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டன.

Next Story