ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 5 May 2020 5:00 AM IST (Updated: 5 May 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வாங்க, ஏராளமானவர்கள் குவிந்தனர்.

ஈரோடு, 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் உணவு இல்லாமல் சிரமப்படுவதை தவிர்க்க ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வினியோகம் தொடங்கியது.

ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வாங்க, ஏராளமானவர்கள் குவிந்தனர். காலையில் இருந்தே தங்களுக்கு எப்போது பொருட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், கடைகளுக்கு முன்பு போடப்பட்டு இருந்த கோடுகளுக்குள் நின்று கொண்டிருந்தனர். கடை ஊழியர்கள் யாரும் அடுத்தடுத்து நெருங்கி வரவேண்டாம் என்று எச்சரித்துக்கொண்டே இருந்தனர். அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்தவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர்.

சில கடைகளில் மத்திய அரசு அறிவித்த சில பொருட்களை வழங்கவில்லை என்று பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஊழியர்கள் அரசு இந்த பொருட்கள் மட்டும்தான் வினியோகிக்கும்படி வழங்கி உள்ளது என்று பதில் அளித்தனர்.

Next Story