குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்: நல்லம்பள்ளி அருகே பரபரப்பு


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்: நல்லம்பள்ளி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 5 May 2020 11:00 PM GMT (Updated: 2020-05-06T01:50:12+05:30)

நல்லம்பள்ளி அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாதின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது தின்னஅள்ளி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தின்னஅள்ளி காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story