விருத்தாசலத்தில் போலீசார், துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை


விருத்தாசலத்தில் போலீசார், துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை
x
தினத்தந்தி 5 May 2020 9:30 PM GMT (Updated: 2020-05-06T03:00:48+05:30)

விருத்தாசலத்தில் போலீசார், துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை.

விருத்தாசலம்,

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க ரெயில்வே ஊழியர்கள் சார்பில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், நகராட்சி மற்றும் ரெயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் பாதபூஜை செய்து, மலர் தூவினர். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கினார். இதில் ரெயில் நிலைய மேலாளர் ஜெகதீசன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன், தனிப்பிரிவு காவலர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story