கோவையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
கோவையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை.
கோவை,
கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று கோவை ராஜவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 3 அம்மா உணவக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். என்ற கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்கள் சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக ஊசி போடப்பட்டது. இதில் மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி வசந்தகுமார், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story