கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தல்


கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2020 4:40 AM IST (Updated: 6 May 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர், 

கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கில் தளர்வுகள்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது மக்களின் அத்தியாவசிய பணிகளை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவுக்கேற்ப சில தளர்வுகளோடு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி வீட்டைவிட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.

கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

கை கழுவும் பழக்கம்

வெயில் காலம் என்பதால் உப்பு கரைசல் நீர் கொண்டு அடிக்கடி வாய் கொப்பளிப்பதையும், சோப்பு அல்லது கிருமி நாசனி கொண்டு கைகழுவுவதையும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க கடைகளில் அனைத்து பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

கடைகளுக்கு முன்பு 1 மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் நின்று பொருட்கள் வாங்குவதற்கு தனித்தனியாக குறியீடு வரைந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story