பருத்தியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் ஆலங்குடியில் நடந்தது
பருத்தியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி ஆலங்குடியில் நடந்தது.
நீடாமங்கலம்,
பருத்தியில் மாவு பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி ஆலங்குடியில் நடந்தது.
பருத்தி பயிர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பருத்தியில் மாவு பூச்சியை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி ஆலங்குடி கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராஜா.ரமேஷ் கலந்து கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகசூல் இழப்பு
பருத்தி பயிரானது பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படுவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாவு பூச்சியானது வறட்சியான தட்பவெப்பநிலை நிலவும் சமயங்களில் அதிக அளவில் பரவி மிகுந்த சேதத்தை உண்டாக்குகிறது. இவை காற்றின் மூலமாகவும், பண்ணை கருவிகள் வாயிலாகவும், வயல்களில் பணிபுரியும் ஆட்களின் உடையில் ஒட்டி கொண்டும், எறும்புகள் வாயிலாகவும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு பரவிவிடுகின்றன.
இவை இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து, மடங்கி பின்பு உதிர்ந்து விடுகிறது. பூச்சிகளால் தாக்கப்பட்ட செடியானது குட்டையாக காணப்படும். மேலும் இவை தண்டு, சப்பை மற்றும் பருத்தி காய் ஆகியவற்றையும் தாக்கி சேதத்தை உண்டாக்கும். இதை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் மருந்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேப்ப எண்ணெய் மருந்து
முன்னதாக விவசாயிகளின் வயல்களில் அசடிராக்டின் வேப்ப எண்ணெய் மருந்து தெளிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையொட்டி விவசாயிகளுக்கு அசடிராக்டின் என்ற வேப்ப எண்ணெய் மருந்து வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story