தோவாளை அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: மேலும் ஒருவர் பலி; டிரைவர் கைது


தோவாளை அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: மேலும் ஒருவர் பலி; டிரைவர் கைது
x
தினத்தந்தி 6 May 2020 6:03 AM IST (Updated: 6 May 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி, 

தோவாளை அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பர்கள்

வெள்ளமடம் சகாய நகரை சேர்ந்தவர் அருண் (வயது 27). இவருடைய நண்பர் கிருஷ்ணன் (20). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சகாயநகரில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தனர். தோவாளை அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் பக்கம் சென்ற போது எதிரே கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிய ஒரு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் அருண் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மீனச்சல் அருகே தேரிவிளையை சேர்ந்த சுதர்சன குமாரை (59) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த அருணுக்கு வினிதா (24) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கிருஷ்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

Next Story