வேலூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்


வேலூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
x
தினத்தந்தி 6 May 2020 8:35 AM IST (Updated: 6 May 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்.

வேலூர்,

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மற்றும் கட்டிட வேலைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 7 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் விடுதிகள் மற்றும் 3 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடமாநிலத்தவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வேலூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. வேலூர் தாசில்தார் ரமேஷ் தலைமையிலான வருவாய்துறையினர் முதற்கட்டமாக 3 திருமண மண்டபங்களில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் பெயர்கள், சொந்த மாநிலம், வேலூருக்கு எதற்காக வந்தார்கள் என்பது குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தனர். இந்த விவரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாவும், இவற்றின் அடிப்படையில் அந்தந்த மாநில நிர்வாகத்திடம் பேசி வடமாநிலத்தவர்களை பஸ், ரெயில் மூலம் விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்துறையினர் தெரிவித்தனர்.


Next Story