நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன
x
தினத்தந்தி 6 May 2020 10:15 PM GMT (Updated: 6 May 2020 8:33 PM GMT)

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். இவர்கள் நாமகிரிப்பேட்டை அண்ணா காலனி மற்றும் மோளபள்ளிப்பட்டி பாலிக்காடு பகுதிகளை சேர்ந்தவர்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இருவருக்கும் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன.

இதனால் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-

கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் இருவருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன. 2 பெண்களும், அவர்களின் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இருப்பினும் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் குழந்தைகள் தனியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அவர்களுக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்கப்படுவது இல்லை. முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி கொடுத்து வருகிறோம். தாயாருக்கு தொற்று இருப்பது முன்னதாகவே தெரியவந்ததால் குழந்தைகள் பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் 5 நாட்கள் கழித்து ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story