விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2020 2:01 AM GMT (Updated: 7 May 2020 2:01 AM GMT)

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறிவுரை

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் முறைகள், ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்துத்துறைகள் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்தார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தினார். அதோடு நோய் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மேலும் இந்நோய் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உத்தரவிட்டார்.



Next Story