மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்டுகாதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சம் + "||" + Asking for protection Graduate girl refuge in a police station in love with her husband

பாதுகாப்பு கேட்டுகாதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டுகாதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு, காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சமடைந்தார்.
குளித்தலை, 

பாதுகாப்பு கேட்டு, காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சமடைந்தார்.

காதல் திருமணம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ரெங்காச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இன்பரசு (வயது 23). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். அப்போது, அதே கல்லூரியில் படித்த தாந்தோன்றிமலை காமராஜர் தெரு பகுதியை சேர்ந்த பவித்ரா (22) என்பவருடன், இன்பரசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் தற்போது இன்பரசு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்கள் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அய்யர்மலையில் உள்ள கோவிலில் இன்பரசு மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இதையடுத்து இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், பவித்ரா தனது காதல் கணவரான இன்பரசுவுடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 தரப்பினரிடமும் எழுதி வாங்கி கொண்டு, பவித்ராவை, இன்பரசுவுடன் அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பட்டதாரி பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை