எறையூரில் ரேஷன் கடையில் குவிந்த குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச்சென்றனர்


எறையூரில் ரேஷன் கடையில் குவிந்த குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 7 May 2020 5:56 AM GMT (Updated: 7 May 2020 5:56 AM GMT)

எறையூரில் ரேஷன் கடையில் குவிந்த குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச்சென்றனர்.

மங்களமேடு, 

எறையூரில் ரேஷன் கடையில் குவிந்த குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச்சென்றனர்.

ரேஷன் அட்டைதாரர்கள் குவிந்தனர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள எறையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடையில் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு அறிவித்த படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு பொருட்களை வாங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் உணவு பொருட்கள் வாங்க அந்த கடைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் வந்து குவிந்தனர். ரேஷன் கடையில் 2 பணியாளர்கள் மட்டுமே இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

கொரோனா பரவும் அபாயம்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இன்றி குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒருவரை ஒருவர் நெருங்கி நின்றவாறு சென்று பொருட்களை வாங்கினர். மேலும் ரேஷன் கடைக்கு வந்தவர்கள் பயன்படுத்த கை கழுவும் திரவம், தண்ணீர் போன்றவை வைக்கப்படவில்லை. இதனால் அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ரேஷன் கடைக்கு வரும் ரேஷன் அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கி செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story