டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி பேராசிரியர் கைது


டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 8 May 2020 3:51 AM IST (Updated: 8 May 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி பேராசிரியர் கைது கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நல்லாத்தூர் கைகாட்டி அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு மதுவாங்க நேற்று காலையில் ஏராளமான மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் தனியார் கல்லூரி பேராசிரியர் லியோ ஸ்டான்லி(வயது 41) என்பவர் மதுக்கடைக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டையை கைகளில் பிடித்தபடி, கோஷங்கள் போட்டுக்கொண்டு கடையை நோக்கி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தடுத்து நிறுத்தி, கைது செய்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Next Story