மாவட்ட செய்திகள்

சூளகிரி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோய் தடுப்பு பணிகள் தீவிரம் + "||" + Intensification of anti-inflammatory activity in the restricted area of chulagiri

சூளகிரி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோய் தடுப்பு பணிகள் தீவிரம்

சூளகிரி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
சூளகிரி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 பேருக்கும், மத்திகிரியில் 2 பேருக்கும் என 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சூளகிரி பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு தீவிர நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஓசூர் வந்த 50 பேர்

சூளகிரியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 6 பேரும் ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களை மருத்துவ குழுவினர் கண்காணிக்க உள்ளனர். இதைத் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வந்த 50 பேர் ஓசூரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தாசில்தார் ரெஜினா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, விமல் ரவிக்குமார், துணை தாசில்தார்கள் வளர்மதி, சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் கிருஷ்ணகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி மட்டும் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து மாவட்டத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர், காரிமங்கலம், காடுசெட்டிப்பட்டி ஆகிய சோதனைச்சாவடிகளில் போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.
2. விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது விதியை மீறிய டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கும்படி உத்தரவிட்டார்.
3. திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார் படுத்தும் பணி தீவிரம் பஸ் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
4. சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலூர் பகுதியில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்.
5. உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 வியாபாரிகளுக்கு அபராதம் 7 கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும், 7 கடைகளை மூடவும் கலெக்டர் உத்தரவிட்டார்.