திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 8 May 2020 2:58 AM GMT (Updated: 8 May 2020 2:58 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் 5 பேருக்கு உறுதி

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் இதுவரை 51 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும், இதர மாவட்டத்தில் இருந்தும் திருச்சிக்கு வருகை புரிந்த மீதமுள்ள 256 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 253 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதே வேளையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சியை சேர்ந்த ஒருவர் சேலத்திலும், மற்றொருவர் கரூரிலும் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக 5 பேருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 பேருக்கு தொடர் சிகிச்சை

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 36 பேர் கொரோனாவுக்காக சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 பேர் உள்பட திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story