வனவிலங்குகள் வேட்டை: நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது


வனவிலங்குகள் வேட்டை: நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2020 12:07 PM IST (Updated: 8 May 2020 12:07 PM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரையும் கைது செய்தனர்.

கன்னிவாடி, 

கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோணிமலை வனப்பகுதியில், வனச்சரகர் சக்திவேல், வனவர் ரெங்கநாதன், வனக்காப்பாளர் நாகராஜன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது நாயோடை அடிவார பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் சுற்றித்திரிந்தனர். 

இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் அவர்கள் தப்பியோட முயன்றனர். இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சாணார்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னர் (வயது 30), கன்னிவாடியை சேர்ந்த நாகராஜ் (44), முருகேசன் (52), கண்ணன் (45) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். 

மேலும் நாட்டுத்துப்பாக்கி, அரிவாள், இரும்பு வலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story