கடலூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


கடலூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 3:30 AM IST (Updated: 9 May 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

கடலூர்,

அக விலைப்படி நிறுத்தம், ஒப்புவிப்பு விடுப்பு ஊதியம் நிறுத்தம், வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பை கண்டித்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் ராஜாமணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், அகவிலைப்படி, ஒப்புவிப்பு விடுப்பு ஊதியத்தை அரசு நிறுத்தியதை கண்டிக்கிறோம். அதேபோல் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியையும் குறைத்து விட்டனர். இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கிறோம். டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று அரசு பணி வழங்க வேண்டும். கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்கள், துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு ஊதியம் மற்றும் காப்பீடு வழங்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், ஓய்வூதியர்கள் உதவு கரம் அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, பலராமன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story