கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 May 2020 10:45 PM GMT (Updated: 8 May 2020 10:45 PM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 61 வயது முதியவர் வீடு திரும்பினார். இதையடுத்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 61 வயது முதியவர் வீடு திரும்பினார். இதையடுத்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் குணம் அடைந்த 44 பேர் வீடு திரும்பினர். 21 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கும்பகோணத்தை சேர்ந்த 61 வயது முதியவர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினார்.

இதன் மூலம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.

தற்போது 20 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

356 பேர் காத்திருப்பு

குணம் அடைந்து வீடு திரும்பியவருக்கு மருத்துவக்கல்லூரி கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சிறப்பு அலுவலர் டாக்டர் குமுதா லிங்கராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மருதுதுரை மற்றும் டாக்டர்கள், பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

குணம் அடைந்து வீடு செல்லும் நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 7 ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6 ஆயிரத்து 814 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. இன்னும் 356 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Next Story