திருபுவனை அருகே கொரோனா பாதித்த கிராமத்துக்கு சீல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருபுவனை அருகே கொரோனா பாதித்தவர் வசித்த கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு செய்தார்.
திருபுவனை,
திருபுவனை அருகே க.குச்சிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிச்சென்றார். அங்கு காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் புதுவை திரும்பினார். கோரிமேடு எல்லைக்கு வந்த அவரை, மருத்துவக்குழுவினர் பரிசோதித்து, 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி, அனுப்பினர்.
இந்த நிலையில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனையில் அந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கிராமத்துக்கு சீல் வைப்பு
லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வசித்த க.குச்சிப்பாளையம் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் பிரதான சாலை சவுக்கு கட்டையால் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசாரின் பாதுகாப்பு பணியை புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு செய்தார். கிராமத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாமலும், வெளிநபர்கள் உள்ளே வராமலும் தடுக்குமாறு போலீசாரை அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story