பள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள்


பள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள்
x
தினத்தந்தி 9 May 2020 4:00 AM GMT (Updated: 2020-05-09T09:30:48+05:30)

பள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள.

பாப்பாரப்பட்டி,

பென்னாகரம் ஒன்றியம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் விசாலாட்சிகுட்டி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குட்டி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கபசுர குடிநீர், முககவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு பால்வள ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரி, துணைத்தலைவர் வசந்தி ரத்தினவேலு, ஊராட்சி செயலர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story