கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 May 2020 4:14 AM GMT (Updated: 9 May 2020 4:14 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த 2 பெண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியில் வசித்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரது ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

இதில் 33 வயது ஆண், 44, 48 வயதுடைய 2 பெண்கள், 13 வயது சிறுமி ஆகியோருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதே போல மும்பையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் உறவினர் வீட்டில் தங்கிய 2 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

மேலும் 2 பேர் பாதிப்பு

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூளகிரியைச் சேர்ந்த 2 பெண்களின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் சிலருக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் 20 வயது வாலிபர் ஒருவருக்கும், 40 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Next Story